/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடாகோவில் பிரிவு சாலையில் விபத்துமேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
/
தடாகோவில் பிரிவு சாலையில் விபத்துமேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
தடாகோவில் பிரிவு சாலையில் விபத்துமேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
தடாகோவில் பிரிவு சாலையில் விபத்துமேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2025 01:09 AM
தடாகோவில் பிரிவு சாலையில் விபத்துமேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
கரூர், :கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கரூர், மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நங்காஞ்சி ஆறு தடாகோவில் பாலத்தின் வழியாகத்தான் அரவக்குறிச்சிக்கு நுழைய வேண்டும். இவ்வழியாக பழனி, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பஸ், சரக்கு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. அதிகளவு போக்குவரத்து நடக்கும் சாலையிலிருந்து பிரிந்து, அரவக்குறிச்சிக்கு செல்ல வேண்டும். அரவக்குறிச்சிக்கு கிழக்கு பகுதி கிராமங்களான தடாகோவில், கணக்குவேலன்பட்டி, ராசாபட்டி, வெஞ்மாங்கூடலுார் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரவக்குறிச்சிக்கு டூவீலரில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அப்போது, நெடுஞ்சாலையை குறுக்கே கடக்கும் போது மின்னல் வேகத்தில் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இங்கு, விபத்துகளை தடுக்க சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அமைத்தால் அரவக்குறிச்சி பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் அடியில் அமைக்கப்படும் சாலை வழியாக தடையில்லாமல் செல்லும். இதனால் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இந்த பிரிவில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.