/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழவர் சந்தைகளுக்கு எலக்ட்ரானிக் தராசு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
உழவர் சந்தைகளுக்கு எலக்ட்ரானிக் தராசு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
உழவர் சந்தைகளுக்கு எலக்ட்ரானிக் தராசு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
உழவர் சந்தைகளுக்கு எலக்ட்ரானிக் தராசு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 18, 2025 12:58 AM
உழவர் சந்தைகளுக்கு எலக்ட்ரானிக் தராசு: விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் மற்றும் வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளுக்கு, எலக்ட்ரானிக் தராசு வழங்கவேண்டும் என,
விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 1996-2001ல், தி.மு.க., ஆட்சி காலத்தில், மாநிலம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. விவசாயிகள், விளை பொருட்களை இடையில் தரகர்கள் இல்லாமல், பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் பொது
மக்களுக்கு குறைந்த விலையில் காய்கள் கிடைத்து வருகிறது.உழவர் சந்தையில் கடை அமைக்க விவசாயிகளுக்கு அடையாள அட்டை, எடை கற்கள் கொண்ட தராசு, அரசு பஸ்களில் மூட்டைகளில் காய்களை, உழவர் சந்தை வரை எடுத்து செல்ல வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் காய்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்காக, உழவர்
சந்தையில் பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த, 2011--2021ல், 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் உழவர் சந்தை செயல்பாடுகள் மந்தமான நிலையில் இருந்தது. கடந்த, 2021ல் ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,
ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து, உழவர் சந்தையை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், கரூர், வெங்கமேடு உழவர்
சந்தையில் உள்ள விவசாயிகள் சிலர் சொந்தமாக, எலக்ட்ரானிக் தராசுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது, காய்கள் சரியான எடையில் இல்லை, குறைவாக உள்ளது என்ற புகார் பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்து வருகிறது. எனவே, கரூர், வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளை சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு எலக்ட்ரானிக் தராசு வழங்கப்பட வேண்டும் என, பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

