/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
/
கரூரில் நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
கரூரில் நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
கரூரில் நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
ADDED : மார் 06, 2025 01:49 AM
கரூரில் நாளை முதல்வர் உழவர்பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
கரூர்:-கரூர் மாவட்டத்தில், நாளை (மார்ச் 7) முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விவசாய கூலி வேலை செய்பவர்கள் மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், கல்வி உதவித்தொகையாக, 1,250 முதல், 6,750 ரூபாய் வரையிலும், திருமண உதவித்தொகையாக, 8,000 முதல், 10,000 ரூபாய் வரையிலும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக, 22,500 ரூபாய், விபத்து மரணம், காயம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக, 1,02,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருப்பவர்கள், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை (7ம் தேதி) காலை 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை முகாமில் விண்ணப்பிக்கலாம். அப்போது, உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மாணவ, மாணவியர் பயிலும் கல்லுாரி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்கலாம்.
இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.