/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க ஆலோசனை கூட்டம்
/
ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 09, 2025 02:05 AM
ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் சங்க ஆலோசனை கூட்டம்
கரூர்:கரூர் மாவட்ட, ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்மென்ட் சங்க ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில், தான்தோன்றி மலையில் நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் கோவில் நில பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்க, தமிழக அரசு உத்தரவாதம் தர வேண்டும், மனைக்கு உண்டான பட்டா மற்றும் நத்தம் பட்டாவிற்கு ஆன்லைனில் ஏற்படும் காலதாமதத்தை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அகில இந்திய தலைவர் கண்ணன், மாநில செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் கார்த்தி, பொருளாளர் ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.