/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்த நிலையில் வால்வு குழி வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
/
திறந்த நிலையில் வால்வு குழி வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
திறந்த நிலையில் வால்வு குழி வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
திறந்த நிலையில் வால்வு குழி வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
ADDED : மார் 26, 2025 01:56 AM
திறந்த நிலையில் வால்வு குழி வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
கரூர்:கரூரில் குடிநீர் வால்வு குழி, திறந்த நிலையில் உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, கருப்பாயி கோவில் தெரு வழியாக, வாகனங்கள் நெரூர், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றன. அந்த பகுதியில் இருந்து, கரூர் நகர பகுதிக்கு, வாகனங்கள் எளிதாக சென்று விட முடியும். இந்நிலையில், கருப்பாயி கோவில் தெரு, அண்ணா வளைவு பிரிவில், சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக, சிலாப் கற்கள் அகற்றப்பட்டு, குடிநீர் வால்வு குழி திறக்கப்பட்டது.
ஆனால், சிலாப் கற்கள் கொண்டு, குழியை மாநகராட்சி ஊழியர்கள் மூடவில்லை. இதனால், இரவு நேரத்தில் கருப்பாயி கோவில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழியில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் வால்வு குழியை, சிலாப் கற்கள் கொண்டு, பாதுகாப்பாக மூடி வைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.