/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கணவன், மனைவி கொலை வழக்குதலைமறைவு குற்றவாளி கைது
/
கணவன், மனைவி கொலை வழக்குதலைமறைவு குற்றவாளி கைது
ADDED : பிப் 09, 2025 01:01 AM
கணவன், மனைவி கொலை வழக்குதலைமறைவு குற்றவாளி கைது
கரூர்:வெள்ளியணை அருகே நடந்த, கணவன், மனைவி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே மணவாடியில் கடந்த, 2020ல் கணவன், மனைவி, சொத்து பிரச்னைக்காக கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, கரூர் ராயனுாரை சேர்ந்த சகோதரர்கள் பார்த்திபன், 31, கவுதம், 30, வெங்கடேஷ், 29, ஆகிய மூன்று பேரை, வெள்ளியணை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பிறகு, ஜாமினில் வெளியே வந்த மூன்று பேரில் வெங்கடேஷ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலைமறைவாகி விட்டார். இதனால், பார்த்திபன், கவுதம் ஆகிய இரண்டு பேருக்கு, கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதித்தது. தற்போது, இரண்டு பேரும் திருச்சி மத்திய சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவி இரட்டை கொலை வழக்கில், திருச்சியில் இரண்டு ஆண்டுகளாக, தலைமறைவாக இருந்த வெங்கடேசை, கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.