/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 08, 2025 01:30 AM
அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில்மகளிர் தின விழா கொண்டாட்டம்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உலக மகளிர் தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி தலைமை வகித்தார்.
குஜிலியம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர் கவிதா, 'புன்னகை நம் வசம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர், ''மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதையும், சம வேலைக்கு சம ஊதியம் பெறுவதையும், ஆண்களை போலவே வாய்ப்புகளையும் பெறுவதையும் உறுதி செய்வது நம் கூட்டு பொறுப்பு என்பதை நினைவில் கொள்வோம். பெண்களை தடுத்து நிறுத்தும் தடைகளை உடைப்போம். பெண்கள் தங்கள் முழு திறனையும் அடைய, அதிகாரம் பெற்ற ஒரு சமூகத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும்,'' என்றார்.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சி களிலும், விளையாட்டு போட்டி களிலும் வெற்றி பெற்ற மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை, பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவியர் செய்திருந்தனர்.