/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 06:34 AM
அரவக்குறிச்சி: டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளில், கிராம நிர்வாக அலுவலர்-களை கட்டாயமாக ஈடுபடுத்துவதை தடுக்க கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் நடந்தது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்ட-மைப்பு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பக்கத்து மாநிலங்களில், டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை தனியார் பணி-யாளர்கள் மூலம்
செயல்படுத்துவதை போல, தமிழகத்திலும் செயல்படுத்த கோரி கோஷம் எழுப்பப்பட்டது. அரவக்குறிச்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் நாகமணிகண்டன், மாவட்ட பிரசார செய-லாளர்
ஜெகதீசன், வட்ட செயலாளர் நீலமேகம், பொருளாளர் நிசாம் ராஜா, துணைத் தலைவர் முருகவேல், துணை செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.