/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாழறும்பு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுகோள்
/
வாழறும்பு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுகோள்
ADDED : மார் 07, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கடவூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள, வாழறும்பு பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க, எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கரூர் மாவட்டத்தின் எல்லையாக உள்ள கடவூர், மலைத் தொடர்கள் உள்ள பகுதியாகும். பொன்னணியாறு அணை இங்கு உள்ளது. மேலும், குறுநில மன்னர்கள் வேட்டையாட பயன்படுத்திய வீடுகள், ஓய்வறைகள் கடவூரில் உள்ளன. இந்த மலைத் தொடரில், பாறைகளுக்கு நடுவே, அழகிய நீரூற்று உள்ளது.
மரங்கள் நிறைந்த வாழறும்பு பகுதி எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

