/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2024 07:41 AM
கரூர்: தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், வெண் ணைமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன், மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், வாரிய முடிவுகளை நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, இயற்கை மரண உதவியாக, 50 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து பணப்பலன்களும், 50 நாட்களில் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன், கட்டட தொழிலாளர் சங்க தலைவர் குப்புசாமி, நிர்வாகிகள் ஞானவேல், கலாராணி, சக்திவேல் உள்பட, பலர் பங்கேற்றனர்.