/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., ரயில்வே கேட்குகை வழிப்பாதை சீரமைக்கப்படுமா
/
டி.என்.பி.எல்., ரயில்வே கேட்குகை வழிப்பாதை சீரமைக்கப்படுமா
டி.என்.பி.எல்., ரயில்வே கேட்குகை வழிப்பாதை சீரமைக்கப்படுமா
டி.என்.பி.எல்., ரயில்வே கேட்குகை வழிப்பாதை சீரமைக்கப்படுமா
ADDED : பிப் 02, 2025 01:11 AM
டி.என்.பி.எல்., ரயில்வே கேட்குகை வழிப்பாதை சீரமைக்கப்படுமா
கரூர்: புகழூர் டி.என்.பி.எல்., ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதை சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதை சீரமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புகழுர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் அருகே உள்ள ரயில்வே குகைவழிப்பாதைக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இது குண்டும், குழியுமாக, செடிகொடிகளால் புதராக உள்ளது. குகைவழிப்பாதைக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் எதுவும் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே ரயில்வே குகைவழிப்பாதைக்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மேம்படுத்தி, மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.