/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது லாரி மோதிவாலிபர் உயிரிழப்பு
/
பைக் மீது லாரி மோதிவாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 14, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மீது லாரி மோதிவாலிபர் உயிரிழப்பு
கரூர், :கரூர் அருகில், பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.கரூர் வெங்கமேடு அம்மன் நகர், 1வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 34. இவர், கரூர் சேலம் பைபாஸ் சாலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.