/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்
/
பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்
பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்
பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ADDED : பிப் 15, 2025 02:03 AM
பள்ளப்பட்டியில் எஸ்.டி.பி.ஐ.,சட்ட நகல் எரிப்பு போராட்டம்
அரவக்குறிச்சி:மத்திய அரசு அமல்படுத்திய வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், பள்ளப்பட்டியில் நகர தலைவர் முகமது அனிபா தலைமையில், வக்பு திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
பள்ளப்பட்டி கிழக்கு கிளை செயலர் மாலிக்தீன், மாவட்ட துணைத் தலைவர் ேஷக்பரீத், மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். போராட்டத்தின் இறுதியாக வக்பு திருத்த சட்ட மசோதாவை எரித்தும், கிழித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மாநில செயலர் பாஸ்டர் மார்க், மாவட்ட தலைவர் பாஷா, பொதுச் செயலர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.