/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆம்புலன்ஸ் வேன் திருடிய ஒருவர் கைது
/
ஆம்புலன்ஸ் வேன் திருடிய ஒருவர் கைது
ADDED : பிப் 22, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்புலன்ஸ் வேன் திருடிய ஒருவர் கைது
கரூர்:வெள்ளியணை அருகே, ஆம்புலன்ஸ் வேனை திருடி சென்றதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார், 22, டிரைவர். இவர் கடந்த, 20ல் மதுரை தேசிய நெடுஞ்சாலை, காக்காவாடி பிரிவில் மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் வேனை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, ஆம்புலன்ஸ் வேனை காணவில்லை. இதுகுறித்து, தீபக்குமார் கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார், ஆம்புலன்ஸ் வேனை திருடியதாக சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், 46, என்பவரை கைது செய்தனர்.