/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைகுண்டாஸில் டிரைவர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைகுண்டாஸில் டிரைவர் கைது
ADDED : மார் 02, 2025 01:34 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லைகுண்டாஸில் டிரைவர் கைது
கரூர்: கரூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், சுக்காலியூர் சாலை புதுார் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் மாரியப்பன், 31, டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் பிப்., 7 மாலை மாரியப்பன் அதே பகுதியை சேர்ந்த, ஏழு வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
இந்நிலையில், மாரியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, மாரியப்பனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள மாரியப்பனிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, கரூர் மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.