/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சிபள்ளப்பட்டி மாணவன் முதலிடம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சிபள்ளப்பட்டி மாணவன் முதலிடம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சிபள்ளப்பட்டி மாணவன் முதலிடம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சிபள்ளப்பட்டி மாணவன் முதலிடம்
ADDED : மார் 06, 2025 01:25 AM
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சிபள்ளப்பட்டி மாணவன் முதலிடம்
அரவக்குறிச்சி:தேசிய பசுமை படை சார்பில், கரூரில் நடந்த மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், பள்ளப்பட்டி அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார்.
அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முஹம்மது ரூபியான். இன்றைய சூழலில், அதிகமாக சேர்ந்து வரும் குப்பை கழிவுகளை கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் முறை, தீப்பற்றினால் தானாகவே தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவி, இரவு நேரங்களில் வாகனங்கள் உமிழும் ஒளியால் ஏற்படும் விபத்தை தடுக்க தானியங்கி கருவி, ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனம் நகரும் கருவியை கண்டுபிடித்து, பள்ளப்பட்டியில் அனைவரின் முன்னிலையில், மாணவர் ரூபியான் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
இது தொடர்பாக மாணவரை, பல்வேறு அமைப்புகள் பாராட்டி வந்த நிலையில், கரூரில் தேசிய பசுமை படை சார்பில் மாவட்ட அளவில் நடந்த, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை மாணவர் ரூபியான் செய்து காட்டி முதலிடம் பிடித்தார்.
இவரை, பள்ளி தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.