/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மா.கம்யூ., கட்சி சார்பில் நினைவு சுடருக்கு வரவேற்பு
/
மா.கம்யூ., கட்சி சார்பில் நினைவு சுடருக்கு வரவேற்பு
மா.கம்யூ., கட்சி சார்பில் நினைவு சுடருக்கு வரவேற்பு
மா.கம்யூ., கட்சி சார்பில் நினைவு சுடருக்கு வரவேற்பு
ADDED : ஏப் 02, 2025 01:39 AM
மா.கம்யூ., கட்சி சார்பில் நினைவு சுடருக்கு வரவேற்பு
கரூர்,:கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், சேலம் சிறை தியாகிகள் நினைவு சுடருக்கு, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில், நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில், கரூர் மனோகரா கார்னர் பகுதிக்கு வந்த, தியாகிகள் நினைவு சுடர் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., டில்லி பாபு சிறை தியாகிகள் நினைவு குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம், சக்திவேல், முருகேசன், கந்தசாமி, தண்டபாணி, ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர். பிறகு, தியாகிகள் நினைவு சுடர் குழுவினர், வெள்ளியணை வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு சென்றனர்.