/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் குற்றப்பிரிவில் கூடுதல் போலீசாரைநியமிக்கணும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
கரூர் குற்றப்பிரிவில் கூடுதல் போலீசாரைநியமிக்கணும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் குற்றப்பிரிவில் கூடுதல் போலீசாரைநியமிக்கணும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் குற்றப்பிரிவில் கூடுதல் போலீசாரைநியமிக்கணும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 08, 2025 01:42 AM
கரூர் குற்றப்பிரிவில் கூடுதல் போலீசாரைநியமிக்கணும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் மற்றும் போதிய போலீசார் பணியில் இல்லை. இதனால், கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் (சட்டம்- ஒழுங்கு) பின்புறம், சிறிய இரண்டு அறைகளில், குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் தனியாக இயங்கி வருகிறது. அதில், இன்ஸ்பெக்டர் என தனியாக யாரும் இல்லை. சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டரே பொறுப்பாக உள்ளார். மேலும், குற்றப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போலீசாரை விட, குறைந்தளவிலேயே போலீசார் பணியில் உள்ளனர்.
கரூர் பகுதிகளில் நடக்கும் கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் குறித்து, கரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க செல்லும் பொதுமக்கள், குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசார் பல்வேறு பணிகளுக்காக வெளியே சென்று விடுகின்றனர். இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
வெளியில் சென்ற, குற்றப்பிரிவு போலீசார் எப்போது திரும்பி வருவார்கள் என்ற விபரம் தெரியாதால், புகார் கொடுக்க வருவோர் பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதில், சிலர் புகார் கொடுக்காமலேயே சென்று
விடுகின்றனர்.சில நேரங்களில் பொதுமக்கள் தரும் புகாரை, குற்றப்
பிரிவு போலீசார் பெற்றுக் கொண்டாலும், உடனடியாக எப்.ஐ.ஆர்., போடுவதில்லை. பலத்த சிபாரிசுக்கு பிறகு தான், புகார் மனு ஏற்கப்பட்டு, புகார்தாரருக்கு குற்றப்பிரிவு ஸ்டேஷனில் தரப்படுகிறது. எனவே, கரூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில், பொது மக்கள் தரும் புகாரை உடனடியாக பெற்றுக் கொள்ள வசதியாக, எந்த நேரமும் பணியில் இருக்க கூடிய வரவேற்பாளர் பணியிடத்தை ஏற்படுத்தி, இன்ஸ்பெக்டரை தனியாக பணியமர்த்த வேண்டும்.
மேலும் கொள்ளை, திருட்டு தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரிக்க, கரூர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், கூடுதல் போலீசாரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

