/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி
/
அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி
அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி
அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி
ADDED : பிப் 09, 2025 01:02 AM
அரசு கல்லுாரிக்கு டி.என்.பி.எல்.,நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி
கரூர்,:புகழூர், டி.என்.பி.எல்., சார்பில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மகளிர் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். தான்தோன்றிமலை, அரசு கலை கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா நடத்துவதற்கு நன்கொடையாக, 50 ஆயிரம் ரூபாயும், முத்துராஜபுரம், பெரியவள்ளிபாளையம் கிராமங்களின் கோவில்களை புனரமைக்க, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதனை, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) சுதா மற்றும் கோவில் திருப்பணிக்குழுவினரிடம் காசோலையாக வழங்கப்பட்டது.