/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து துறை சீரழிந்து விட்டது முன்னாள் அமைச்சர் கண்டுபிடிப்பு
/
போக்குவரத்து துறை சீரழிந்து விட்டது முன்னாள் அமைச்சர் கண்டுபிடிப்பு
போக்குவரத்து துறை சீரழிந்து விட்டது முன்னாள் அமைச்சர் கண்டுபிடிப்பு
போக்குவரத்து துறை சீரழிந்து விட்டது முன்னாள் அமைச்சர் கண்டுபிடிப்பு
ADDED : செப் 02, 2024 03:02 AM
கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணராயபுரம் தொகுதி உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, மணவாடியில் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், நேற்று நடந்தது.
அதில், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கிய, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலா-ளருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:கடந்த, 2011ல் அ.தி.மு.க., வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியவில்லை. 2021 வரை, 10 ஆண்டுகள், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. மாற்றம் வேண்டும் என்பதற்காக, தமிழக மக்கள்,
தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டனர். ஆனால், மாற்றம் வரவில்லை. ஏமாற்றம் தான் கிடைத்தது. இதனால், தமிழக மக்கள் தி.மு.க., ஆட்சியை வரும், 2026ல் வீட்-டுக்கு அனுப்புவார்கள்.தமிழகத்தில், போக்குவரத்துத்துறை சீரழிந்து விட்டது. போக்கு-வரத்து ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இல்லை. சென்னையில் மினி பஸ்களை, தி.மு.க., அரசு தனியார் மயமாக்க முயல்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட ஜெயல-லிதா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளை-ஞரணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ் உள்ளிட்ட,
அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* இதேபோல், குளித்தலை தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பஞ்., தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட
செயலாளருமான விஜயபாஸ்கர், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.