/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
ADDED : ஜூலை 14, 2011 11:59 PM
குளித்தலை: குளித்தலை கிராமியம் தொண்டு நிறுவனம், தஞ்சை கோட்ட எல்.ஐ.சி., இணைந்து மகளிர் குழு உறுப்பினர் குழு காப்பீடு திட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா குளித்தலையில் நடந்தது.
கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் நாராயணன் தலைமை வகித்தார். மாநில முதன்மை பயிற்றுநர் கருப்பண்ணன், தஞ்சை கோட்ட குழு காப்பீட்டு அலுவலர் சங்கர், கனரா வங்கி கிளை மேலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். கிராமியம் ஒருங்கிணைப்பாளர் அம்பிகா வரவேற்றார். ஆண்டுக்கு ஒரு உறுப்பினர் குழுக்காப்பீடு திட்டத்தில் நூறு கட்டிய உறுப்பினர் மகன், மகள் ஒன்பாதம் வகுப்பு முதல் ப்ளஸ்2 வரை படித்து வரும் 24 மாணவர்களுக்கு முதல் தவணையாக 600 ரூபாயும், இரண்டாவது தவணையாக 35 மாணவர்களுக்கும் தலா 600 ரூபாய் வழங்கி எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் பேசினார். விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், கிராமியம் தொண்டு நிறுவன பணியாளர்கள், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.
கிராமியம் மாவட்ட பயிற்றுநர் மலையப்பன் நன்றி கூறினார்.

