ADDED : மே 08, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை : கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி அருகே சாரதா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது.
அந்த பகுதியில், 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தனியார் மகளிர் கல்லுாரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், சாரதா நகர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது, நிழற்கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அப்பகுதி மக்கள், அதை சீரமைக்க கோரி பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

