/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆலோசனை கூட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 22, 2024 01:17 AM
குளித்தலை, டிச. 22-
குளித்தலை, அரசு போக்குவரத்து பணிமனை அருகில், தமிழ்நாடு போக்குவரத்து கழக கரூர் மண்டல தொழிலாளர் சங்கத்தின் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொறுப்பாளர் தங்கராசு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் பேசி முடிவு செய்தல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பயன்களை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் இன்சூரன்ஸ் பணத்தை பிடித்தம் செய்து விட்டு, மருத்துவம் பார்க்க மறுக்கும் மருத்துவமனை, இன்சூரன்ஸ் கம்பெனி இடையே உள்ள குளறுபடிகளை அரசு சரி செய்ய வேண்டும். சிகிச்சை பெறும் தொழிலாளர்களுக்கு செலவு தொகையை அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குளித்தலை அரசு போக்குவரத்து கழக பணிமனை ஏ.ஐ.டி.யு.சி., பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.