/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்காய்கறி சாகுபடி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில்காய்கறி சாகுபடி தீவிரம்
ADDED : ஜன 18, 2025 01:28 AM
கிருஷ்ணராயபுரம் பகுதியில்காய்கறி சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பிள்ளபாளையம், புனவாசிப்பட்டி, சேங்கல், சின்ன சேங்கல், கோவக்குளம், குச்சிப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பஞ்சப்பட்டி, குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக விளை நிலங்களில் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். இதில், கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணற்று பாசனம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, கிணற்றில், சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கிறது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து காய்கள் பிடித்துள்ளன. விளைந்த காய்கறிகளை அறுவடை செய்து உள்ளூர் வாரச்
சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். கத்திரிக்காய் ஒரு கிலோ, 40 ரூபாய், வெண்டைக்காய், 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள்
ஓரளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.