ADDED : பிப் 01, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து முன்னணிமா.செ., மீது வழக்கு
குளித்தலை, :குளித்தலை அடுத்த சித்தலவாய் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம், 45; ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த, 29ல் மஞ்சமேடு பொது கழிப்பிட சுவரில், 'தமிழ் கடவுள் முருகன் மலையை காக்க, ஹிந்து முன்னணியின் மாபெரும் அறப்போராட்டம், திருப்பரங்குன்றம் நோக்கி விரைவோம்' என்ற வாசகம் எழுதிய போஸ்டரை ஒட்டினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையால், ராஜலிங்கம் மீது மாயனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.