/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி
/
வே.பாளையத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 01, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வே.பாளையத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி
கரூர்:கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், வேலாயுதம்பாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்து பேசினார். பிறகு, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் சென்ற மாணவ, மாணவியர், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை கொண்டு சென்றனர்.
பேரணி தொடக்க விழாவில், அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் ஜாபர், வேலாயுதம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஓம்பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.