/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜெ.,பேரவை சார்பில்துண்டு பிரசுரம் வழங்கல்
/
ஜெ.,பேரவை சார்பில்துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : பிப் 15, 2025 01:59 AM
ஜெ.,பேரவை சார்பில்துண்டு பிரசுரம் வழங்கல்
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஜெ.,பேரவை சார்பில், மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில், நேற்று காலை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கரூர் உழவர் சந்தை மற்றும் லைட் ஹவுஸ் கார்னர் வரை, வியாபாரிகள், பொது மக்களுக்கு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்ட ங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா வழங்கினார்.
அப்போது, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட துணை செயலாளர் மல்லிகா, பகுதி செயலாளர்கள் சக்திவேல், சேரன் பழனிசாமி, சுரேஷ், தினேஷ் குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது இப்ராஹூம் உள்பட, பலர் பங்கேற்றனர்.