/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் வாயிற்கூட்டம்
/
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் வாயிற்கூட்டம்
ADDED : பிப் 15, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் வாயிற்கூட்டம்
கரூர்:அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில தலைவர் சத்திய நாராயணா தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை வாயிற் கூட்டம் நடந்தது.
அதில், சீரமைப்பு என்ற பெயரில் ஆட் குறைப்பு, பீட் குறைப்பு, பட்டுவாடா குறைப்பு திட்டங்களை கைவிட வேண்டும், அஞ்சல் சேவைகளை தனியாருக்கு, தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாயிற்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்பட, அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.