ADDED : பிப் 15, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருட்டு; வாலிபர் கைது
கரூர்:கரூரில் பைக்கை திருடியதாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர், ஆத்துார் பிரிவு அருள் நகரை சேர்ந்தவர் சரவணன், 28; இவர் கடந்த, 13ல் கரூர்-கோவை சாலையில் உள்ள, கொங்கு திருமண மண்டபம் முன், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, சரவணன் சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, சரவணன் அளித்த புகார்படி, பைக்கை திருடியதாக, கரூர் நொச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 25, என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

