/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜெயலலிதா பிறந்த நாள்வாலிபால் போட்டி
/
ஜெயலலிதா பிறந்த நாள்வாலிபால் போட்டி
ADDED : பிப் 18, 2025 01:03 AM
3 பெண்கள் மாயம்
ஓசூர்:சூளகிரி அருகே ஒமதேப்பள்ளியை சேர்ந்தவர் நரசம்மா, 55. இவரது கணவர் கடந்த, 7 ஆண்டுக்கு முன் உயிரிழந்தார். கடந்த, 13 காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நரசம்மா மாயமானார். அவரது உறவினர் முருகன், 45, புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தளி அருகே, உப்பராயனப்பள்ளியை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி மாலா, 30. கூலித்தொழிலாளி. கடந்த, 15 காலை வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் தளி போலீசில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ரவி, 45, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கெலமங்கலம் ஜிபியை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி சந்திரிகா, 31. கடந்த, 15 காலை குடும்ப தகராறு காரணமாக வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் ரேணுகா, 48, புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓசூர்:தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளையொட்டி, கெலமங்கலத்தில் வாலிபால் போட்டிகள் துவங்கியுள்ளது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., போட்டியை துவக்கி வைத்தார். ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் இருந்து மொத்தம், 25க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகின்றன.
மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், ஓசூர் முன்னாள் நகர செயலாளர் பால் நாராயணன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் சையத் அசேன், கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த வார இறுதியில், இறுதி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

