/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புஞ்சைக்காளக்குறிச்சி தொழிற்பேட்டையில்வணிக மனைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ADDED : பிப் 26, 2025 01:29 AM
புஞ்சைக்காளக்குறிச்சி தொழிற்பேட்டையில்வணிக மனைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கரூர்: புஞ்சைக்காளக்குறிச்சி தொழிற்பேட்டையில், வணிகமனைகளுக்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அரவக்குறிச்சி அருகில், புஞ்சை காளக்குறிச்சி தொழிற்பேட்டையில் வணிக மனைகள் மற்றும் தொழில் மனைகள் வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனை விபரங்கள், மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக விபரங்களுக்கு கிளை மேளாளர் சர்மிளா, சிட்கோ கிளை அலுவலகம், மாவட்ட தொழில் மைய வளாகம், 69/10 சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை கரூர் முகவரியிலும், மொபைல் எண்ணான 9445006553 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.