ADDED : மார் 04, 2025 01:30 AM
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற மனு
கரூர்:என்.புதுப்பாளையத்தில் இருந்து, அரங்கநாதன்பேட்டை வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ஞானசேகரன், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:கரூர் அருகில், நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் வழியாக திருமுக்கூடலுாருக்கு சாலை செல்கிறது. இதில், என்.புதுப்பாளையத்தில் இருந்து அரங்கநாதன் பேட்டை வரை சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்னால், இரண்டு பஸ்கள் சென்று வரும் வகையில் இருந்தது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகி சாலையில், ஒரு பஸ் கூட செல்ல இடைஞ்சலாக உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றாமல், நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைத்து விடுகின்றனர். சாலையின் அளவீடு பணிகளை மேற்கொண்டு, ஆக்கி ரமிப்பு அகற்ற வேண்டும். அதன்பின் சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த
விதமான சிரமம் இல்லாமல் பஸ்கள் உள்பட வாகனங்கள் செல்ல நடவடிக்கை தேவை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.