ADDED : மார் 07, 2025 01:54 AM
கடவூரில் தீயணைப்பு நிலையம் அவசியம்
கரூர்,:-கடவூரில், தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கடவூர் தாலுகாவில், 23 கிராமங்கள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். கால்நடைகளை மர தட்டிகள் மூலம் அடைத்துள்ளனர். தற்போது வெயில் காலம் என்பதால், அடிக்கடி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முசிறி, மணப்பாறை, வேடசந்துார் ஆகிய நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டும். தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர, ஒரு மணி நேரமாகும். இந்த காலதாமதத்தால், பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின்றன. மேலும் உயிரிழப்பையும் தடுக்க முடியாமல் போகிறது. பொதுமக்கள் நலன் கருதி, கடவூர் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.