/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் சார்பதிவாளர்அலுவலகம் திறப்பு விழா
/
குளித்தலையில் சார்பதிவாளர்அலுவலகம் திறப்பு விழா
ADDED : மார் 07, 2025 01:59 AM
குளித்தலையில் சார்பதிவாளர்அலுவலகம் திறப்பு விழா
குளித்தலை,:குளித்தலையில், சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் இங்கு கலெக்டர் தங்கவேல், குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 2.51 கோடி ரூபாய் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.
தரைதளத்தில் அலுவலகம், மின் முத்திரை அறை, கணினி அறை, கழிவறை, காத்திருப்போர் அறை, வாகனம் நிறுத்துமிடம், முதல் தளத்தில் பதிவறை, சேமிப்பு அறை, உணவுக்கூடம் உள்ளது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., மாணிக்கம், சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட பதிவாளர் குமார், மாவட்ட பதிவாளர் தணிக்கை அருள்ஜோதி, சார்பதிவாளர் ஸ்ருதி, தாசில்தார் இந்துமதி, முன்னாள் மாவட்ட பஞ்.,துணைத்தலைவர் தேன்மொழி, ஒன்றிய செயலர்கள் தியாகராஜன், சந்திரன் மற்றும் பலர்
பங்கேற்றனர்.