/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில்நுாற்றாண்டு விழா
/
கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில்நுாற்றாண்டு விழா
ADDED : மார் 08, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில்நுாற்றாண்டு விழா
கரூர்:கரூர், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய, தொடக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது.அதில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.பிறகு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் பரிசு வழங்கினார். இடைநிலை ஆசிரியை சுமதி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், வட்டார கல்வி அலுவலர் கவுரி, வளமைய பொறுப்பாளர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன், மேலாண்மை குழு தலைவர் இளமதி, ஆசிரியை தெரசாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.