/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை கடம்பவனேஸ்வரர்கோவிலில் தேரோட்ட விழா
/
நாளை கடம்பவனேஸ்வரர்கோவிலில் தேரோட்ட விழா
ADDED : மார் 10, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை கடம்பவனேஸ்வரர்கோவிலில் தேரோட்ட விழா
குளித்தலைகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், மாசி மக தேரோட்ட விழா, கடந்த, 2ல் தொடங்கியது. தினந்தோறும் இரவு, சுவாமி திருவிதி உலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை காலை, 8:45 மணிக்கு மேல் சிறிய தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 12 காலை, 9:00 மணிக்குமேல், 12:00 மணிக்குள் கடம்பர் கோவில் திருஈங்கோய்மலை சுவாமிகள் சந்திப்பு, மஞ்சள் நீராட்டு விழா, காவிரியில் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.