/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடாஜலபதி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
/
வெங்கடாஜலபதி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மார் 10, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெங்கடாஜலபதி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
குளித்தலை :குளித்தலை அடுத்த மேட்டு மருதுார், தேவேந்திரகுல தெருவில் புதிதாக வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டது. இக்கோவதில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம், மருதுார் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது. பின், புனிதநீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்தனர். இன்று காலை, 10:30 மணியளவில் கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வேதமந்திரம் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாக்குழு சார்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கினர்.