/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 13, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:கரூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், சின்னதாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், சின்னதாராபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன வள்ளியின், ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், பொருளாளர் பாலசுப்பிரமணி, ஆய்வக நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பிரேம்குமார், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சதீஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.