ADDED : மார் 14, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்கன்றுகள் பராமரிப்பு பணி
கிருஷ்ணராயபுரம்:வீரியபாளையம் பஞ்சாயத்து பகுதியில், மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்ணமுத்தாம்பட்டி கிராம சாலை பகுதிகளில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளை சுற்றி வளர்ந்த முள் செடிகள், களைகள் அகற்றுதல், மரக்கன்றுகளுக்கு தண்ணீர்
ஊற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.