/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில் முன் பாய்ந்துபெண் விபரீத முடிவு
/
ரயில் முன் பாய்ந்துபெண் விபரீத முடிவு
ADDED : ஏப் 01, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் முன் பாய்ந்துபெண் விபரீத முடிவு
குளித்தலை:குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சிவக்குமார், 35. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 32. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டு, தமிழ்ச்செல்வி கோபித்துக் கொண்டு காலை, 10:00 மணியளவில் குமாரமங்கலம் ரயில்வே கேட் அருகில், தண்டவாளத்தில் தலையை வைத்து அந்த வழியே வந்த ரயிலில் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் சடலத்தை திருச்சி ரயில்வே போலீசார் கைப்பற்றி, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.

