/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை
/
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை
ADDED : ஏப் 01, 2025 01:26 AM
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை
கரூர்:ரம்ஜான் பண்டிகையை யொட்டி, கரூர் அருகே திருமாநிலையூரில் திறந்த வெளி மைதானத்தில், இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
உலகம் முழுவதும், நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். கரூர் மாவட்டத்தில், 31 மசூதிகள், எட்டு திறந்த வெளி மைதானங்களில், இஸ்லாமியர்களின் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூர்-- - கோவை சாலை ஈத்கா பள்ளிவாசலில் நேற்று காலை, 8:00 முதல், 8:30 மணி வரை சிறப்பு தொழுகை நடந்தது. அதில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு, இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதையொட்டி, ஈத்கா பள்ளிவாசல் பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், ஜவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ., அமைப்புகள் சார்பிலும், பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகையும், கரூர் மாநகராட்சி, 23 வது வார்டு காசிம் தெருவில் விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
* பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில், 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில், 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு பின்னர், ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். அப்போது நோன்பின் மகத்துவம் குறித்தும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதன்
மூலம், அல்லாவின் பேரருளை பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது.
தொழுகை முடிந்து வெளியே வந்ததும், அவர்கள் ஏழை -எளியவர்களுக்கு பொருளுதவி, பண உதவி உள்ளிட்டவற்றை செய்தனர்.