/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை குளத்தின் வாய்க்கால்துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
/
வெள்ளியணை குளத்தின் வாய்க்கால்துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வெள்ளியணை குளத்தின் வாய்க்கால்துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
வெள்ளியணை குளத்தின் வாய்க்கால்துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 03, 2025 01:39 AM
வெள்ளியணை குளத்தின் வாய்க்கால்துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர்:வெள்ளியணை குளத்தின் வாய்க்காலை, துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின், நீர் மேலாண் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெள்ளியணை பெரிய குளத்தில் இருந்து மணவாடி வழியாக உப்பிடமங்கலம், வீரராக்கியம் குளத்திற்கு செல்லும் வாய்க்கால் துார்வாரப்பட்டது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
வெள்ளியணை குளம் அமைந்துள்ள மேட்டுப்பட்டி முதல், சின்னத்தம்பிபாளையம் வரை உள்ள வாய்க்காலில், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. முழுமையாக நீரோடையை ஆக்கிரமித்துள்ளது. பல இடங்களில் நாணல் புற்கள் அதிகளவில் வளர்ந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில், இதன் விதைகள் பரவி
வருகின்றன.
எனவே, 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம், வாய்க்காலை துார்வாரி கரைகளை சீரமைத்து பனை விதைகள், நாட்டு மரங்கள் நட்டு பராமரிப்பு செய்திட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.