/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி
/
கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி
கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி
கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி
ADDED : ஏப் 11, 2025 01:21 AM
கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி
கிருஷ்ணராயபுரம்:கருப்பத்துார், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், பங்குனி மாத உத்திர திருவிழாவை முன்னிட்டு, சிவன், அம்மன் திருத்தேரில் பவனி வரும் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கருப்பத்துாரில் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, சுவாமி திருத்தேரில் பவனி வரும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். கோவிலை சுற்றி திருவீதி உலாவாக பவனி வந்து கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. கருப்பத்துார், லாலாப் பேட்டை, கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், திம்மாச்சிபுரம், கே.பேட்டை, குளித்தலை பகுதிகளை சேர்ந்தவ ஏராளமானோர் கலந்து கொண்டனர்.