/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களை தேடிஉங்கள் ஊரில்திட்ட முகாம்
/
உங்களை தேடிஉங்கள் ஊரில்திட்ட முகாம்
ADDED : ஏப் 16, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்களை தேடிஉங்கள் ஊரில்திட்ட முகாம்
கரூர்:கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், இன்று (16ம் தேதி) காலை 9:00 மணி முதல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் நடக்கிறது.
இதில், கட்டளை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிந்தலவாடி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பஞ்சப்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிவற்றில் பட்டா மாறுதல் முகாம் நடக்கிறது. அப்போது பொது மக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல்
தெரிவித்துள்ளார்.