பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம்
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம்
ADDED : ஜூலை 25, 2026 06:16 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
ஒன்றிய அளவிலான, கூடைப்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவர்கள்
சிறப்பிடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வாகினர்.
அரவக்குறிச்சி
ஒன்றிய அளவிலான கூடைப்பந்து போட்டி, கரூர் புன்னம்சத்திரம் சேரன்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட
பிரிவில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரவக்குறிச்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை எதிர்கொண்டு 18-8 என்ற
புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.
அதேபோல், 19
வயதுக்குட்பட்ட பிரிவில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை
எதிர்கொண்டு 24-14 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பிடித்தனர். இரு
பிரிவிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை
பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில்,
உதவி தலைமை ஆசிரியர் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின்
செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் வாழ்த்து
தெரிவித்தனர்.
