தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் கபடியில் சிறப்பிடம்

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் கபடியில் சிறப்பிடம்

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் கபடியில் சிறப்பிடம்


ADDED : ஜூலை 30, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றிய அளவில் நடந்த கபடி போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றியடைந்து, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அரவக்குறிச்சி ஒன்றிய அளவிலான கபடி போட்டி, தனியார் கல்லுாரியில் நடைபெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணியினர், கவுந்தராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அணியினரை, 27:8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று

முதலிடம் பிடித்தனர்.

இதேபோல, 14 வயதுக்குட்பட்ட பிரிவில் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியுடன் மோதி, 24:27 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாம் இடம் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் பெண்கள் அணியினர் முதலிடம் பிடித்தனர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவியரை பள்ளப்பட்டி மேல்நிலைப்

பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை

ஆசிரியர்கள் தாஜூதீன், பள்ளப்பட்டி எஜூகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us