/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் ரூ.5.89 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
/
குளித்தலையில் ரூ.5.89 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
குளித்தலையில் ரூ.5.89 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
குளித்தலையில் ரூ.5.89 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : ஆக 31, 2024 12:31 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டு வளாகத்தில், நேற்று முன்தினம் புதிய பொது கழிப்பிடம் கட்டுதல் பணிக்கு, 36.28 லட்சம் ஒதுக்-கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார், பொறி-யாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து,
பணியை துவங்கி வைத்தார்.மேலும் இதே இடத்தில் சங்கிலிராயன் கோவில் தெரு, புதிய புதுகோர்ட் தெரு, சேது ரத்தினம் பிள்ளை தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, பெரியபாலம் பகுதி, மணத்தட்டை மேல குடி தெரு ஆகிய பகுதிகளில் புதிய
கழிப்பிடம் கட்டுதல், சத்திய-மங்கலம் உரக்கடங்கில் புதிதாக ஐந்து மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வளம் மீட்பு மையம் அமைத்தல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ் குளித்தலை நகராட்சி
பகுதிகளில் புதிய சிமென்ட் சாலை அமைத்தல் அதற்கான பூமி பூஜை நடந்தது.தொடர்ந்து தெப்பக்குளம் வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்-பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 லட்சம் மதிப்பில் ரத்தினகிரிஸ்வரர் கோவில் குளம் புனரமைத்தல் பணிக்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி
வைத்தார். 10 வளர்ச்சி பணிக-ளுக்கு, ஐந்து கோடியே, 89 லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கியுள்ளது.தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவிராஜா, மாவட்ட தொண்டர் அணி பொறுப்பாளர் பாலசுப்-பிரமணியன், நகர துணை செயலர் செந்தில் குமார், பொருளாளர் தமிழரசன், மற்றும் கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.