/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் குப்பை கிடங்கில் 2வது நாளாக தீ
/
கரூர் குப்பை கிடங்கில் 2வது நாளாக தீ
ADDED : ஜூலை 02, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் - வாங்கல் சாலை, அரசு காலனி பகுதி யில், மாநகராட்-சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் குப்பை கிடங்குக்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரம் நெருங்கியதாலும், பலமாக காற்று வீசியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிய-வில்லை. இந்நிலையில், நேற்று காலை தொடர்ந்து, இரண்டா-வது நாளாக தீயை அணைக்கும் பணியில், கரூர் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும், கரூர் - வாங்கல் சாலையில் புகை மூட்டம் காணப்பட்டது.