sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

/

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


ADDED : செப் 10, 2024 06:04 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட வினாயகர் சிலைக்கு மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று மாலை, 5:30 மணியளவில் பெரியபாலத்தில் இருந்து, எட்டு விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு வரப்பட்டன.ர் சிலைகளுக்கு முன் பெண்கள் முளைப்-பாரி எடுத்துக்கொண்டு, மாரியம்மன் கோவில் தெரு, நகராட்சி அலுவலகம், பஜனை மடம், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, நீதி-மன்றம், கடம்பர் கோவில் வழியாக ஊர்வலமாக சென்று கடம்பன் துறை காவிரி ஆற்றில் கரைத்தனர்.

இந்து முன்னணி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சர-வணன், நகர தலைவர் துரை மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், பா.ஜ., பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குளித்தலை டி.எஸ்.பி.,

செந்தில்குமார் தலை-மையில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், சரவணன், மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* வேலாயுதம்பாளையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 40 விநா-யகர் சிலைகள் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வேலாயுதம்பாளையம், புகழூர், நான்கு சாலை உள்ளிட்ட

பல்வேறு பகுதிகளில் கடந்த, 7 ல், 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வேலாயுதம்பாளையம் மலை வீதியில் இருந்து தொடங்கிய விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை, நெரூர் கைலாச

ஆசிரமம் அமர்நாத் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பிறகு, முக்-கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சண்-முகம், திருச்சி கோட்ட இந்து முன்னணி கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய தலைவர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை-யொட்டி, அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் கபூர், வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படை-யினர் வேலாயுதம்பாளையம் முதல், தவிட்டுப்பாளையம் காவிரி-யாறு வரை பாதுகாப்பு பணியில்

ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us