/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி எஸ்.டி.பி.ஐ., நுாதன போராட்டம்
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி எஸ்.டி.பி.ஐ., நுாதன போராட்டம்
தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி எஸ்.டி.பி.ஐ., நுாதன போராட்டம்
தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி எஸ்.டி.பி.ஐ., நுாதன போராட்டம்
ADDED : ஆக 25, 2024 06:52 AM
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் அனைவரையும் அச்சுறுத்தி வரும், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நுாதனமாக போராட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது.
பள்ளபட்டி நகராட்சியில், பல ஆண்டுகளாக தெரு நாய்களின் அச்சுறுத்தலால் ஆடு, மாடு, கோழி மற்றும் தனியாக செல்லும் குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்-பட்டுள்ளது.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக, வித்தியாசமான முறையில் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது. அதில் கோழி, ஆடு, மாடுகளை கருணை கொலை செய்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்-தது. மேலும் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கையில் ஆடு, மாடு, கோழி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நாய்-களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றனர். வினோதமாக நடத்தப்பட்ட போராட்டத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்-டது.

